சந்திரமுகி 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா கங்கனா ரணாவத்..?
பி. வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
எனினும் முதல் பாகத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று படக்குழு தகவல் கூறுகிறது. ஏற்கனவே பி. வாசு சந்திரமுகி 2 படத்தை கன்னடம் மற்றும் தெலுங்கில் இயக்கியுள்ளார். அந்த கதையின் சாயிலில் இப்புதிய பாகம் இருக்குமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
எனினும், தமிழில் சந்திரமுகி படம் மற்ற மொழிகளை விடவும் பெரிய ஹிட் என்பதால், முந்தைய சந்திரமுகி 2 கதையை அவர் ரீமேக் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் இப்பொதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாது.

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. அப்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இயக்குநர் பி. வாசு உடன் லாரன்ஸ், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா, விக்னேஷ், சுரேஷ் மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா இல்லை. அவரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் ஷூட்டிங் நிறைவு புகைப்படத்தில் அவர் இல்லாமல் போனது, சந்திரமுகி 2 படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து படப்பிடிப்பு உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)