கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் தள்ளிபோகிறதா ? கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

 
1

எம்.எஸ்.தோனி, கபீர் சிங், வினய விதய ராமா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி.

 பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்து வரும் இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார்.  'ஷேர்ஷா' படத்தில் நடித்ததன் மூலம் சித்தார்த் - கியாரா அத்வானி இடையே காதல் மலர்ந்தது, இவர்களது திருமணம் பற்றி தான் நீண்ட நாட்களாக திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.  அதன் பின்னர் இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி ராஜஸ்தான் பகுதியின் ஜெய்சல்மாரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

1

கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  முகேஷ் அம்பானி உட்பட பிரபலங்கள் பலருக்கும், இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.  

அதன்படி பிப்ரவரி 6-ம் தேதியான இன்றைய தினம் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திருமணம் தள்ளிப்போனதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.  பிப்ரவரி-6ம் தேதி நடைபெறவிருந்த திருமணம் ஒரு நாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி முதல் நாள் மெஹந்தி, அடுத்த நாள் சங்கீத் விழாவும் அதற்கு மறுநாள் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

From Around the web