பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறாரா குமரன்..?

 
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறாரா குமரன்..?

சின்னத்திரையில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து நடிகர் குமரன், அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக வெளியான தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கதிர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு மிகப்பெரியளவில் ரசிகர் வட்டம் உள்ளது.

முன்னதாக இந்த சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவருடைய மறைவை தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் குமரன் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், இந்த ஷோவை ரசித்து பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு ரசிகனாக ரசித்து பார்த்தேன். மேலும் இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்த்தது தான் இதில் எதையும் சேர்க்கவும் இல்லை நீக்கவும் இல்லை. ஜெயிக்கிறோம் அல்லது ஜெயிக்காமல் போகிறோம் அது முக்கியமில்லை ‌‌. உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை குறிப்பிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஏதோ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் குமரனுடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் அவர் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web