முடிவுக்கு வருகிறதா ‘மௌனராகம்’ சீசன் 2..? 

 
1

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது.  இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவரை விட்டு வாழும் மனைவியின் கதை தான் இந்த சீரியல். 800 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் கொரானாவால் முடிக்கப்பட்டது. 

இதையடுத்து மீண்டும் ‘மௌனராகம்’ சீரியலின் சீசன் 2 கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் புத்தம் புதிய கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி வந்தது. இதில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து விடுகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையான சக்தியை வைத்து சீரியல் நகர்ந்து வந்தது. இந்த சீரியலில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜீவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட உள்ளது. தற்போது வில்லியான ஸ்ருதி குறித்த உண்மை அனைத்தும் குடும்பத்தினருக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சீரியல் விரைவில் நிறைவுபெறுகிறது. இந்த சீரியல் ஒளிப்பரப்பான நேரத்தில் ‘பொன்னி’ என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

From Around the web