நடிகர் அஜித் மீது அதிருப்தியில் நயன்தாரா...? காரணம் விக்னேஷ் சிவன்..!! 

 
1

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகை நயன்தாராவை இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில்.கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் விக்னேஷ் சிவன். அதன்பிறகு 8 மாத இடைவெளிக்குப் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தார். அஜித் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற உற்சாகத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன். கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று விக்கி பதிவிட்டு இருந்தார்.

1

இந்த 8 மாத இடைவெளியில் அஜித் படத்திற்காக விக்னேஷ் சிவன் தயாரித்த ஸ்கிரிப்ட் அஜித்தை வைத்து ஏகே62 என மாற்றப்பட்டது. இந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது.

இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏகே 62 படம் குறித்து தான் ஷேர் செய்திருந்த பதிவுகளை நீக்கிய விக்னேஷ் சிவன், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது. நயன்தாராவுக்கும் அஜித்துக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் பில்லா, ஆரம்பம், விசுவாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அஜித் சொல்வதைக் கேட்பார் என்று நம்பிய நயன்தாரா பிரச்சனையைத் தீர்க்க முயன்றார் ஆனால் முடியவில்லை. இதனால் எந்த சூழ்நிலையிலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1

ஏற்கனவே தனது கணவருக்கு ஆசைக்காட்டி கடைசி நேரத்தில் வாய்ப்பை பறித்துக்கொண்டு மோசம் செய்ததாக நடிகர் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web