மீண்டும் கவர்ச்சிக்கு தாவிய நயன்தாரா- இந்த நடிகருக்கு மட்டும் சலுகையா..?

 
நயன்தாரா

கடந்த சில வருடங்களாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருந்து வந்த நயன்தாரா, மீண்டும் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.

தமிழில் ஐயா படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற தமிழின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவர் புகழுடன் உள்ளார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்தார் நயன்தாரா. ஆனால் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய அவர், தன்னுடைய அணுகுமுறையை மாற்றினார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் அதிகம் நடித்தார். முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும், கவர்ச்சியாக அவர் உடன் அணியமாட்டார். அதனால் சினிமாவையும் தாண்டி ஒரு அளுமையாக உள்ளார் அவர்.

இந்நிலையில் அட்லீ இயக்கும் ஷாரூக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படத்திற்காக மீண்டும் அவர் கவர்ச்சியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வெளியானது. அப்போது நயன்தாரா கொஞ்சம் கவர்ச்சியான உடைகள் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web