உங்க பேரன்களுக்கு மட்டும் பிடிச்சா போதுமா..? ரஜினிக்கு கேள்வி..!

 
ரஜினிகாந்த்

தீபாவளிக்கு வெளிவரவுள்ள ‘அண்ணாத்த’ படம் தனது பேரனுக்கு மிகவும் பிடித்துள்ளதாக ரஜினிகாந்த் கூறியதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளது வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அண்னாத்த படத்தை தனது மூன்று பேரன்கள் மற்றும் மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் பார்த்தார். அதுதொடர்பாக ஹூட் செயலியில் ஆடியோ பதிவிட்டுள்ள அவர் என் பேரன் வேத்துக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


அதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ரஜினியின் ஆடியோ பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பேரனுக்கு பிடித்துவிட்டால் போதுமா? எங்களுக்கு பிடிக்க வேண்டாமா? நாங்களும் படம் பார்த்துவிட்டு சொல்கிறோம் என்று ரஜினியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

From Around the web