பிரபாஸுக்கும் கீர்த்தி சனோனுக்கும் விரைவில் நிச்சயதார்தமா ?

 
1

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரபாஸ் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அதற்கு இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்‘ படத்தில் அவருடன் நடித்துள்ள கீர்த்தி சனோனை காதலித்து வருவதாகத் தகவல் பரவியது. இதை கீர்த்தி மறுத்திருந்தார்.

1

இதற்கிடையே பிரபாஸுக்கும் கீர்த்தி சனோனுக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக சினிமா விமர்சகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பதுபற்றி நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இதை கேலி செய்யும் வகையில், இந்த விஷயம் பிரபாஸுக்கும் கீர்த்தி  சனோனுக்கும் தெரியுமா? என்று கேட்டுள்ளனர். 

From Around the web