பிரபல சீரியலில் இருந்து விலகுகிறாரா ராஜி ? அவரே சொன்ன பதில்..!
 Nov 3, 2024, 07:35 IST
                                        
                                    
                                 
                                    
                                
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.பாண்டியன் ஸ்டோருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன்  இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது பாகம் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் இரண்டாவது பாகம் தந்தைக்கும் மகன்களுக்கும் இடையிலான பாச பந்தத்தை மையப்படுத்தி  உள்ளது. 
                                
                                
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்து வரும் ஷாலினி இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார் ஷாலினி.
அதன்படி அவர் கூறுகையில், நான் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகள் எதற்காக பரப்புகின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. இதுபோல பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நான் என்றும் உங்கள் ராஜியாகவே பாண்டியன் ஸ்டோரில் தொடருவேன் என்று கூறியுள்ளார்..
 - cini express.jpg)