ரஜினி சிறந்த நடிகரா..? இயக்குநர் அமீர் அதிரடி!

 
1

2012-ல் வெளியான ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வைச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது கலையரசன், வாணி போஜன் நடிப்பில் ‘செங்களம்’ என்ற வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இதன் அறிமுக விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

Rajini

பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமீர், “கலைக்கு அரசியல் கிடையாது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது பெருமை. என்னை பொறுத்தவரை ஆஸ்கர் விருது பெரிய விருது கிடையாது. எல்லோராலும் பார்க்கப்படுவதினால் அதற்கு முக்கியத்துவம் இருந்ததே தவிர அது அந்த நாட்டு தேசிய விருது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் வெளிநாடு சென்ற போது அவருடன் ஹாலிவுட் நடிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம் அவர் ஹாலிவுட் அளவு டெக்னாலஜி இல்லாமல் வெறும் மேக்கப்புடன் பல வேடங்களில் நடித்துதான். ஆனால் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை.

Ameer

சிவாஜி படம் வெளியானபோது அந்த ஆண்டுக்கான மாநில அரசின் சிறந்த நடிகர் விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. மனசாட்சி தொட்டு சொல்லுங்க. ரஜினி சிறந்த நடிகரா? இல்லை. அவர் சிறந்த எண்டர்டெயினர். அந்தப் படத்தை பொறுத்தவரை நான் சொல்கிறேன். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

From Around the web