முகேஷ் அம்பானியின் மகன் ப்ரீ வெட்டிங் விழாவில் பாட ரிஹானாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.இந்த திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் விழா நடத்த அம்பானி திட்டமிட்ட படியே, குறித்த விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் போன்ற முன்னணி பிரபலங்கள் பலரும் படையெடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஹாலிவூட் இல் இருந்து பாடகி ரிஹானா இன்று மாலை 5 மணிக்கு தனது நடனத்தால் ஒட்டுமொத்த உலகையும் கவர்ந்திழுக்க காத்திருக்கிறார்.
இவ்வாறு அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியான ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனம் ஆடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். அவர் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.இவ்வாறான நிலையில், அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு ரிஹானாவுக்கு சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவலை கேட்ட பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள ஆட்ட நாயகிகள் அத்தனை பேரும் வாயடைத்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.