புஷ்பா படத்தில் நடிக்கிறாரா சாய்பல்லவி?

 
1

2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வெளிவந்த தெலுங்கு திரைப்படம், புஷ்பா. தெலுங்கில் உருவானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. இப்படத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு தெலுங்கு உலகின் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்தார். 

அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழு செய்த விளம்பரத்தால், புஷ்பா திரைப்படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்தது.‘ஓ சொல்றியா மாமா’ மற்றும் ‘ஶ்ரீ வள்ளி’ பாடல்கள் பலரையும் புஷ்பா திரைப்படத்தைப் பற்றி பேச செய்தது. ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வெளியான சமயத்தில் ஏற்பட்ட பாடல் குறித்த சர்ச்சைகள் புஷ்பா திரைப்படத்துக்கு மிகச்சிறந்த புரோமஷனாகவே அமைய, இந்தியா முழுவதும் பலரையும் கவர்ந்த புஷ்பா 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

மேலும், புஷ்பா திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று முன்பே கூறப்பட்டது. அதன்படியே, புஷ்பா திரைப்படத்தின் முதல்பாகம் ‘புஷ்பா- தி ரைஸ்’ என்ற பெயரில் வெளிவந்தது. புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா- தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ‘புஷ்பா- தி ரூல்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி புஷ்பா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web