நாக சைதன்யாவை விட்டு பிரிகிறாரா சமந்தா..?

 
சமந்தா மற்றும் நாக சைதன்யா

நடிகர் சமந்தா கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்து ஹைதாபாத்திரத்தில் மற்றொரு வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் ஏ மாயம் சேசவே என்கிற படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குமிடையில் காதல் உருவானது. அதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் ஒன்றாக படங்களிலும் நடிக்க தொடங்கினர். இதனால் தெலுங்கு சினிமாவின் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெயருடன் நாகசைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை நீக்கிவிட்டு வெறும் எஸ் என்று மாற்றினார் சமந்தா.

அப்போது தொடங்கி இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொஞ்ச நாட்களாக இதுகுறித்து எந்தவித செய்தியும் வெளியாகாமல் இருந்தது. நேற்று நாக சைதன்யாவை விட்டு பிரிந்து ஹைதராபாத்தில் சமந்தா தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியானது.

சமந்தாவின் மாமனாரும் நடிகருமான நாகர்ஜுனா இருவரையும் சமாதானம் செய்துவைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இந்த செய்தி தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web