தி ஃபேமிலி மேன் சீரியலில் நடிக்க சமந்தாவுக்கு சம்பளம் இவ்வளவு கோடியா...?

 
நடிகை சமந்தா

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீரியலில் நடிப்பதற்கு நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளத் தொகை அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில் தி ஃபேமிலி மேன் சீசன் 2 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

இந்த சீரியலில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பேசும் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு இப்படி நடிக்கலாமா என அவர்மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், தமிழ் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு தான் படத்தில் நடித்ததாக கூறினார். இந்நிலையில் இந்த சீரியலில் உள்ள 9 எபிசோடுகளில் நடிக்க சமந்தாவுக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரணமாக சமந்தா நடிக்கும் படங்களுக்கு அவருக்கு ரூ. 1.5 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் அதை காட்டிலும் ஒரு சீரியலில் நடிப்பதற்காக அவருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. சமந்தாவை தொடர்ந்து காஜல் அகர்வால், தம்மன்னா, வாணி போஜன் போன்றோரும் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web