மஜிலி பட நடிகையை டேட்டிங் செய்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர்?
பிரபல தெலுங்கு நடிகர் நாகசைத்தனயா. இவர் பிரபல நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதியாக வலம் வந்த இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் இருவரும் நடிப்பின் மீது அதீத கவனம் செலுத்த தொடங்கினர். இந்த நிலையில் சமந்தா தற்போது தனக்கு வந்துள்ள தோல் அலர்ஜி நோய்காக சிகிச்சை எடுத்து வருகிறார். மற்றொரு புறம் நாகசைத்தன்யா குறித்து அடிக்கடி கிசுகிசு பரவி வருகிறது.
முதலில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை நடிகர் நாகசைத்தனயா காதலிப்பதாகவும், இருவரும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் புகைப்படங்கள் வெளியானது. பின்னர் அந்த தகவல் கிசுகிசு என தெரிய வந்தது. இந்த நிலையில் நாகசைத்தன்யாவுடன் ‘மஜிலி’ படத்தில் இணைந்து நடித்த 25 வயதுடைய திவ்யன்ஷா கவுஷிக் உடன் நடிகர் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியது. இதுகுறித்து நடிகை திவ்யன்ஷாவே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “ நாக சைதன்யா மீது எனக்கு கிரஷ் இருக்கிறது, ஆனால் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்ய வாய்ப்பில்லை” என தெரிவித்து வதந்தி அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார். நடிகர் நாகசைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.