நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இவள்ளவு நெருக்கமானவரா சம்யுக்தா..?

 
பார்டியில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சம்யுக்தா

ஆரியை பகைத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் விமர்சனங்களை சந்தித்த சம்யுக்தா நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்யுக்தா ஆரம்பத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். எப்போது அவர் நடிகர் ஆரி அர்ஜுனனை எதிர்க்க ஆரம்பித்தாரோ, அப்போது முதலே அவர் ரசிகர்களிடம் விமர்சனை சந்தித்தார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னும் ஆரி ஆதரவாளர்கள் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தனர். எனினும் அதை கண்டும் காணாமல் இருந்து வந்தார். தற்போது தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை அவர் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருடன் மிக நெருக்கமாக சம்யுக்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் சந்தித்துள்ளதாக அறியப்படுகிறது.

இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் சம்யுக்தா நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஆனால் இதுவரை இதுதொடர்பான தகவலை அவர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும், இதுகுறித்து அவர் விரைவில் மவுனம் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web