7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் நடிக்க போகும் ஹீரோயின் இவரா ?
Jul 24, 2023, 08:05 IST

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி என்பவர் நாயகனாக நடிக்க சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.
19 வருடங்களுக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி தான் தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் நாயகி சோனியா அகர்வாலுக்கு பதிலாக அதற்கு இணையாக வேறொரு நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிதி சங்கர் தான் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளனர். சோனியா அகர்வாலுக்கு மாற்றாக அதிதி சங்கர் என்பது சரியான தேர்வு இல்லை என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.