படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தும்  ‘ஸ்டார் 2’ திரைப்படம் உருவாகிறதா?

 
1
கவின் நடிப்பில் வெளிவந்த  'ஸ்டார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் இளன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக கவின் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கவின் ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு சில மாதங்களிலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டு முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக உருவாக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களோடு இரண்டாம் பாகத்தில் சில புதிய நடிகர் நடிகைகளும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

கவின் தற்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்த படங்களை முடித்துவிட்டு ’ஸ்டார் 2’ படத்தில் இணைவார் என்றும் அதற்குள் இந்த முழுமையான திரைக்கதையை இளன் எழுதி முடித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web