முடிவுக்கு வருகிறதா சன் டிவியின் சுந்தரி சீரியல்...? முடிகிறது ஆனா இல்லை..
 
​​​​​​​

 
1
 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது…இது சொல்லப்போனால் விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரை போல தான் ஆரம்பித்தது…

இந்த தொடரில் கார்த்திக் ஏற்கனவே சுந்தரியை திருமணம் செய்து ஏமாற்றியவர் என்ற விஷயம் தற்போது அனுவுக்கு தெரிய வருகிறது…

அதனால் அவர் கடும் கோபத்தில் சுந்தரி வீட்டுக்கு சென்று சண்டை போடுகிறார் உண்மையை ஏன் இப்படி சொல்லாமல் ஏமாற்றினீர்கள் என கேட்கிறார்.

மேலும் அங்கு வரும் கார்த்திக்கையும் திட்டி தீர்க்கிறார் இப்படி விறுவிறுப்பாக சென்று வருகிறது.இனி என்னை தேடி யாரும் வர கூடாது என அனு கூறிவிட்டு சென்றுவிடுகிறார்…

சுந்தரி சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உறுதி ஆகிவிட்டது.ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் அட என்னங்கடா இது என கேட்டு வருகின்றனர்..

சுந்தரி சீரியலின் அடுத்த சீசனை சன் டிவி தொடங்க இருக்கிறதாம்…அதில் சுந்தரி கலெக்டராக வருவார் என்பது போல தெரிகிறது…இந்த தகவல் தற்போது சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது….

 

From Around the web