நடிகை சுனைனாவின் வருங்கால கணவர் ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தந்தையா ?
 

 
1

தமிழ் சினிமாவின் நடிகைகளின் ஒருவரான சுனைனா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ’காதலில் விழுந்தேன்’ முதல் அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை  சுனைனா    சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு ஆணின் கையுடன் தனது கையை இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக மறைமுகமாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இருப்பினும் சுனைனாவை திருமணம் செய்யப்போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது துபாய் சேர்ந்த யூடியூபர் காலில் அல் அமெரி என்பவர் தான் சுனைனாவை திருமணம் செய்ய போகிறவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புகைப்படத்துடன் கூடிய தகவல் படி சுனைனாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் காலில் அல் அமெரி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுனைனாவை இரண்டாவது ஆக திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் சுனைனா தனது வருங்கால கணவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது வருங்கால கணவரின் தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web