அதுக்குள்ளையா..? மாமன்னன் படம் அடுத்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்..!  

 
1

பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்து போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது. 


இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில் படத்தை பார்த்து ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

From Around the web