அதுகுள்ளையா..? ஆரம்பமானது பிக் பாஸில் கிசு கிசு...!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூல்ஸை மீறிய காரணத்தால் யுகேந்திரன் மற்றும் விசித்ரா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.

அதைக்கேட்ட பிரதீப் ஏற்கனவே நாமினேட் ஆகி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஆறு பேரில் 2 பேரை இங்க அனுப்பிடுங்க பிக் பாஸ் என்று கோரிக்கை வைக்கிறார்…அதன் காரணமாக கடுப்பான விசித்ரா எங்க 2 பேருக்கு சமமான பிளேயர் இருக்காங்களா என விசித்ரா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது…இத்துடன் முதல் ப்ரோமோ முடிந்தது…

இதையடுத்து இரண்டாவது ப்ரோமோ வெளியானது அதில் பிரதீப் நேற்று சப்பாத்தி குருமாவை யாரை கேட்டு சொன்னீங்க என்று விஜய்யைப் பார்த்து கேட்க நேற்று இதுபற்றி நான் பேசும் போது எல்லாரும் இருந்தாங்க அப்போது நீங்க துண்டைத்தான் ஆட்டிக்கிட்டு இருந்தீங்க என்றார் இதனால் இருவருக்கும் சாப்பாட்டு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது..அவர் நான் கொடுத்த பொருளை கொடு என்பது போல சொல்லி சண்டை போட்டார்…

இதையடுத்து சற்றுமுன் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருந்தது…அதில் இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் நடைபெறுகிறது இதில் சில போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்கள் பற்றி கிசுகிசு சொல்லவேண்டும் என புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவை பார்த்த பேன்ஸ்..அப்போ இன்னிக்கு நிறைய பேர் மாட்ட போறாங்க என சொல்லப்பட்டு வருகின்றனர்…யார் கதை பெரிதும் கவரும் எனபதை பாப்போம்…

From Around the web