ரைஸா-வா இது..? எப்படி இருந்த முகம் எப்படி மாறியிருக்கு ...!

 

தமிழில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரைஸா வில்சன். பிறகு பியார் பிரேமா காதல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல சரும நிபுணரான பைரவி செந்திலிடம் முகத்தை பொலிவுறச் செய்யும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனால் பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், முகம் வீங்கி கோரமாகிவிட்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


அதை தொடர்ந்து ரைஸாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்த பைரவி செந்தில், குறிப்பிட்ட சிகிச்சையால் இப்படிப்பட்ட பக்கவிளைவு ஏற்படுவது இயல்பு தான். நாளிடைவில் அது சரியாகிவிடும் என்று தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சைக்கு முன் ரைஸா இதுதொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமின்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரைஸாவின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவருடைய முகம் மிகவும் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் உள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

From Around the web