கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கப்போவது இந்த நடிகரா ?

 
1

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் நித்யா மேனன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது ’சைரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’ஜெனி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக அவர் ’ஜன கன மன’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு அவர் கிருத்திகா உதயநிதி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web