இன்னும் பிக்பாஸ் சண்டை முடியலையா ? வைரலாகும் சௌந்தர்யா ட்வீட்..!  

 
1

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் அண்மையில், ஜேம்ஸ் வஸந்தன் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது செளந்தர்யா பற்றிய உங்கள் நிலைப்பாடு வீட்டில் இருந்தபோது ஒன்றாகவும் வெளியே வந்த பின்னர் ஒன்றாகவும் இருக்கிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முத்துக்குமரன், என்னுடைய கருத்துப்படி செளந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாத ஆள் தான். ஆனால் என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தோடு வேறுபட்டு இருந்தது.

ரன்னர் ஆகும் ஆளவுக்கு செளந்தர்யாவுக்கு வாக்குகள் கிடைச்சிருக்கு. அதனால் அவருக்கு பிடித்தவர்கள் ஏராளம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர் அந்த விளையாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் ஒவ்வொரு முறையும் செளந்தர்யாவை நாமினேட் செய்தேன். என்னுடைய கருத்து இது. ஆனால் அவருடைய க்யூட்னஸ் மக்களுக்கு பிடித்துள்ளதை நான் தவறு என்றும் சொல்ல முடியாது என முத்துக்குமரன் பேசி இருந்தார்.

article_image4

முத்துக்குமரனின் இந்த நேர்காணல் வைரல் ஆன நிலையில், அதற்கு செளந்தர்யா தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  ஆனாலும் “இன்னும்” சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார். முத்துக்குமரனை தான் சூசகமாக தாக்கி பதிவிட்டு இருக்கிறார் செளந்தர்யா. அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

From Around the web