விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகி திருமணம் ஆன 31 வயது நடிகையா..? 

 
1

விஜய் நடிக்க இருக்கும் 69ஆவது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் மேலும் சில விவரங்கள் கசிந்து உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு இணையாக நாயகி கேரக்டர் இருப்பதாகவும், விஜய் ஒரு அரசியல்வாதியாக நடிக்கும் நிலையில் அவர் எதிர்க்கும் அரசியல்வாதியாக நாயகி கேரக்டர் இருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே நாயகி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஆலியா பட் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

31 வயது ஆகிய ஆலியா பட் கடந்த 2022 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்னும் அவர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக தமிழ் படத்தில் அதுவும் விஜய் படத்தில் என்ட்ரி ஆக இருக்கும் ஆலியா பட், இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆலியா பட் மட்டுமின்றி இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் நடிப்பார்கள் என்றும் இது ஒரு மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web