முடிவுக்கு வருகிறதா பிரபல விஜய் டிவி சீரியல்..? ரசிகர்கள் ஷாக்..!
Sep 4, 2023, 22:19 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கண்ணே கலைமானே. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வந்தார்.
பானுவுக்கு கண் பார்வை திரும்பி வந்த நிலையில் அவருக்கு எல்லா உண்மைகளும் தெரியவந்து தன்னுடைய கணவனை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட இந்த சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கி விட்ட நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் நந்தா மாஸ்டர்.
அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி இந்த சீரியலில் நந்தா மாஸ்டருக்கு பதிலாக நடிக்க தொடங்கியுள்ளார்.