வாக்களிக்க விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை இவ்வளவுவா..?

 
வாக்களிக்க விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை இவ்வளவுவா..?

நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக ஓட்டிய சைக்கிளை குறித்து நெட்டிசன்கள் தேடத் தொடங்க, அதனுடைய விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஆர்வமாக வாக்களித்தனர்.

இந்த வாக்குப் பதிவுக்கு நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையிலுள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிள் வந்து வாக்களித்தார். அவர் ஓட்டு போட்டதை விட நடிகர் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

அந்த சைக்கிள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்தது. இதனால் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டையும் சைக்கிளை வைத்தே ரசிகர்கள் தீர்மானித்தனர். அது தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் அடித்தன.

வாக்களிக்க நடிகர் விஜய் வந்த சைக்கிள் மாண்ட்ரா பிராண்டாகும். மொத்தமாக 16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிளின் ஆரம்ப விலை ரூ. 22,500 ஆகும். அவர் பயன்படுத்திய மாடலின் விலை எவ்வளவு என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் இதனுடைய விலை ரூ. 25 ஆயிரத்தை நெருங்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதுவரை காரில் வந்து வாக்களித்தவர், எதற்காக இந்த முறை சைக்கிளில் வந்தார் என்பன போன்ற கேள்விகளும் எழுந்தன. வீட்டிற்கு அருகிலேயே வாக்குச்சாவடி இருந்ததால் காரில் வராமல் சைக்கிளில் வந்தார். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

வாக்குப் பதிவு முடிந்துவிட்ட காரணத்தால் தற்போது விஜய் தளபதி 65 படத்துக்காக ஜியார்ஜியாவுக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெறும் 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அவர், அதை தொடர்ந்து சென்னைக்கு திரும்பவுள்ளார். பிறகு சென்னையில் நடைபெறும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
 

From Around the web