சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் ரஜினி மகனாக நடித்தவர் ஒரு பெரிய ஹோட்டல் ஓனர் மகனா ?

 
1

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இந்தப் படம் நெல்சனுக்கு கம்பேக்காக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மகனாக நடித்திருந்தவர் நடிகர் வசந்த் ரவி. இயக்குநர் ராமின் தரமணி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராக்கி, அஸ்வின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறுகிய காலத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். நடிகர் வசந்த் ரவி அடிப்படையில் ஒரு மருத்துவரும் கூட. மேலும் சென்னையின் பிரபல உணவகமான ‘நம்ம வீடு வசந்த பவன்’ இவருடையது என்று கூறப்படுகிறது.

தி ஸ்பிரிங் என்ற ஹோட்டலையும் இவர் நடத்திவருகிறாராம். வசந்த் ரவியின் திருமணத்துக்கு ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

From Around the web