வின்னர் படம் காப்பியா..? இயக்குனர் சுந்தர் சி கொடுத்த பரபரப்பு பேட்டி!!!

 
1

2003 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ஒரு அதிரடி நகைச்சுவை திரைப்படம் தான் வின்னர்!! இந்த படத்தில் நடிகர் பிரஷாந்த் ஹீரோ ரோலில் நடித்திருந்தார். மேலும் பிரசாந்துக்கு ஜோடியாக  கிரண் ரத்தோட் நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், நம்பியார் மற்றும் ரியாஸ்கான் ஆகியோர்கள் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆக்ஷன், காதல் நிறைந்து அதனுடன் காமெடியும் கலைந்த திரைப்படமாக அமைந்திருந்தது.இந்த திரைப்படத்தில் வடிவேலு தான் காமெடியனாக நடித்திருந்தார். இதில் அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் ஒரு சங்கத்தினை வைத்து செய்யும் வேலைகளில் மாட்டிக்கொண்டு அடி வாங்குவது போன்ற காமெடி காட்சிகள் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் இருந்தால் காமெடி காட்சிகள் இன்றளவும் கூட அதிக அளவில் அனைவராலும் ரசித்துப் பார்க்கப்படும் காட்சிகளாக அமைந்துள்ளது.

 

மேலும் வடிவேலு அந்த திரைப்படத்தில் கூறிய டயலாக்குகள் எல்லாம் பயன்படுத்தி whatsappல் அனுப்பப்படும் ஸ்டிக்கர்கலாக கூட இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது!! இதை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இயக்குனரான சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் ஒரு செய்தியினை பகிர்ந்துள்ளார்!! அது என்னவென்றால்....தெலுங்கில் ஹிட்டான திரைப்படங்களை வைத்து ஒரு ரீமேக் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் சுந்தர்சியை அழைத்திருந்தாராம்!! அதைத்தொடர்ந்து சுந்தர் சி யும் அந்த திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் காட்சிகள் சுந்தர் சி இயக்கிய மூன்று திரைப்படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்ட திரைப்படமாக உள்ளது என்று மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவ்வாறு என்னிடம் உரிமம் வாங்காமல் என்னுடைய திரைப்படத்தை காப்பி அடித்து எடுத்ததால், அதை பழிவாங்கும் வகையில் நான்கு திரைப்படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் வின்னர் திரைப்படம் என்று கூறியுள்ளார்!! அது என்ன காட்சி என்றால்!!!வின்னர் திரைப்படத்தில்  ஹீரோயின் ஆபத்தில் மாட்டிக்கொண்டு கத்தும் பொழுது பிரசாந்தவரை காப்பாற்ற ஓடி வரும் பொழுது நடுவில் வடிவேலு நான் வந்து விட்டேன் என்று ஓடி வருவார். அப்போது கீழே உள்ள ஒரு மேட்டில் கோலிகுண்டுகளில் கால் வைத்து அதில் வழுக்கி விழுவார். இதுபோன்று காட்சியை மாற்றி அமைத்ததாக சுந்தர் சி அவர்கள் கூறியிருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகு தான் சில காலம் கழித்து ஒரு தெலுங்கு படத்தினை பார்த்தபோது அந்த தெலுங்கு படத்தில் வடிவேலு இப்படி வழுக்கி விழும் காட்சி காப்பியடிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதை  சுந்தர் சி பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கூறியிருப்பது என்னவென்றால்... சுந்தர் சி ஏ தெலுங்கில் இருந்து தான் அந்தக் காட்சியை காப்பியடித்து சில மாற்றங்கள் மட்டும் செய்து தன்னுடைய படத்தில் காமெடி காட்சியாக அமைத்திருக்கிறார். ஆனால் இது தெரியாமல், வின்னர் திரைப்படத்தில் அமைந்திருந்த அந்த காமெடி காட்சியை மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் காப்பி அடித்து படம் எடுத்துள்ளதை பற்றி சுந்தர் சி அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறியிருப்பதை கேட்கும் பொழுது  இப்படியும் கூட ஒரு திரைப்படத்தைப் பார்த்து மற்றொரு திரைப்படம் எடுக்கப்படுகிறதா என்று அனைவரும் நினைக்கின்றனர்.

From Around the web