வருகிறதா தனி ஒருவன் 2 ..? இன்று வெளியாகிறது முக்கிய அப்டேட்..! 

 
1

2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். 

பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானியும் தொழிலதிபருமான சித்தார்த் அபிமன்யுவை அம்பலப்படுத்தும் பணியில் இருக்கும் IPS அதிகாரியான மித்ரனைச் சுற்றியே முதல் படத்தின் கதை நகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது..தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார்.

இது பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது..ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்று வந்தது என்பதும் அறிந்த ஒன்றாகும்..இவர்களின் ரசிகர்களுக்கு செம அப்டேட் கிடைத்துள்ளது…

இந்நிலையில் இப்படம் வெளியாகி 28-ம் தேதியுடன்(இன்று) 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இன்று முக்கிய அப்டேட் வரும் என தகவல் வெளியாகியுள்ளது 

அது தனி ஒருவன் 2 பற்றி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது 


 

From Around the web