தனுஷ் படத்திற்கு இப்படி ஒரு நெருக்கடியா ? தனுஷ் எடுக்கப்போகும் முடிவு என்ன ?

இட்லி கடை படத்தின் மூலம் மீண்டும் ஒரு இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார் தனுஷ்.
என்னதான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் லாபகரமான படமாக அமைந்தாலும் எதிர்பார்த்த வெற்றியினை அப்படம் பெறவில்லை. எனவே இட்லி கடை மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் முடிவோடு உள்ளார் தனுஷ். ஆனால் இட்லி கடை ரிலீஸில் தான் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிகின்றது.
கடந்தாண்டு நவம்பர் மாதமே இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் அதே ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உள்ளது. எனவே அப்படத்துடன் கண்டிப்பாக தனுஷின் இட்லி கடை வெளியாகாது என்ற பேச்சு இருந்து வந்தது.
ஆனால் தனுஷ் இட்லி கடை படம் கண்டிப்பாக ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என ஒரு போஸ்ட்டரை வெளியிட்டார். அதன் பிறகு இட்லி கடை ஏப்ரல் 10 வெளியாவது உறுதியாகியது. ஆனால் கடந்த சில தினங்களாக மீண்டும் இட்லி கடை திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே இட்லி கடை சொன்னபடி வெளியாகுமா ? இல்லை தள்ளிபோகுமா ? என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் இட்லி கடை திரைப்படத்தை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடுவதை தவிர வேறு வழி இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் தனுஷின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான குபேரா திரைப்படம் வெளியாகின்றது. எனவே குபேரா படம் வெளியாவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாவது இட்லி கடை திரைப்படத்தை தனுஷ் வெளியிட வேண்டுமாம்.
ஜூன் மாதத்திற்கு பிறகு இட்லி கடை திரைப்படத்தை வெளியிடமுடியாத சுழலும் தனுஷிற்கு உள்ளது. ஏனென்றால் ஜூன் மாதத்திற்கு பிறகு பல பெரிய படங்கள் வெளியாக காத்துகொண்டு இருக்கின்றன. எனவே சரியான ரிலீஸ் தேதி இட்லி கடை படத்திற்கு அமையாது. எனவே ஏப்ரல் மாதம் இட்லி கடை திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என்றே தெரிகின்றது.
வேண்டுமானால் ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் ஏப்ரல் மாதத்தில் இட்லி கடை திரைப்படம் வெளியாகலாம். இல்லை சொன்னபடியே ஏப்ரல் 10 ஆம் தேதியே வெளியாகலாம். எது எப்படியோ கண்டிப்பாக இட்லி கடை ஏப்ரல் மாதம் வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகின்றது.