அதிதிக்கு இப்படியொரு ஆசையா..?

 
அதிதி ராவ்

ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் பங்குகொண்டு நடிகை அதிதி தான் விரும்பும் படங்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்து சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடித்துள்ள படம் மஹாசமுத்திரம். தமிழ், தெலுங்கில் வெளியாகியாகும் இந்த படத்தை அஜய் பூபதி இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆர்.எக்ஸ். 100 படத்தை இயக்கியவர் இவர் தான்.

இந்த படத்தில் அதிதி ராவ், அனு இம்மானுவேல் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, ராமசந்திரா ராஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைதன் இசையமைத்துள்ள இந்த படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

நாளை திரைக்குவரவுள்ள இந்த படத்திற்கான விளம்பர பணிகள் ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிதி, எம்எஸ் சுப்புலட்சுமி பாடல்களை கேட்கும் போது அவரை திரையில் பிரதிபலிக்க விரும்புகிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அதேபோல நடிகை ரேஜாவின் வாழ்க்கை படத்திலும் நடிக்க ஆர்வமாகவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

From Around the web