பிரஜன், சரண்யா நடிக்கும் சீரியலுக்கு இப்படியொரு டைட்டிலா..?

 
பிரஜன் மற்றும் சரண்யா

சினிமா பட தலைப்புகளை காப்பி அடித்து சீரியல்களுக்கு டைட்டில் வைப்பதை டிரெண்டிங்காக செய்து வருகிறது விஜய் டி.வி.

தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ஒரு காலத்தில் சன் டிவி என்று இருந்தது. அந்த டிரெண்டை மாற்றி அமைத்தது விஜய் டிவி தான். அதற்கு காரணம் சீரியல்களுக்கு வைக்கப்பட்ட டைட்டில்களே ஆகும்.

தெய்வம் தந்த வீடு, மவுனராகம், காதலிக்க நேரமில்லை என டிரெண்ட் அடித்த சினிமா டைட்டில்களை சீரியல்களுக்கு வைக்கபப்ட்டன. இதனால் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மக்களிடம் பிரபலமடைந்தன.

இந்த டிரெண்டை கெட்டியாக பிடித்துக் கொண்ட விஜய் டிவி, அதை தற்போதும் தொடர்ந்து வருகிறது. தற்போது அந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான சீரியல்களுக்கு படத்தின் டைட்டில்களே தலைப்பாக இருக்கும்.

அந்த வரிசையில் ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் பிரபலமான பிரஜன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’,’ஆயுத எழுத்து’ சீரியல் மூலம் பிரபலமான சரண்யா இருவரும் சேர்ந்து விஜய் டிவி-க்காக புதிய சீரியலில் நடிக்கின்றனர்.

இந்த தொடருக்கு  ‘வைதேகி காத்திருந்தால்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்புதிய தொடரில் கதாநாயகி சரண்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web