பிக் பாஸ் சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?

பிக் பாஸ் இதுவரை 6 சீசன்களை கடந்துவிட்டது…கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6ல்,சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வென்றார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7-ல் இரண்டு வீடுகள்,18 போட்டியாளர்களுடன் நடைபெறவுள்ளது . அதேநேரம் இந்த சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் நடிகர்கள் அப்பாஸ், பப்லு, நடிகைகள் கெளசல்யா, தர்ஷா குப்தா, விஜய் டிவி பிரபலங்கள் ரக்ஷன், குரேஷி, ஜாக்குலின், இவர்களுடன் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகிறது. இவர்கள் தவிர மேலும் சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..இந்த முறை டிஆர்பி-க்கு பஞ்சமே இல்லாத மாதிரி பலர் வர உள்ளனராம்.
இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் மேலும் இரண்டு பிரபலங்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன…டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நடிகை என கலக்கி வரும் ரவீனா ரவி, பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஃபஹத் பாசிலுக்கு மனைவியாக நடித்திருந்தார் ரவீனா ரவி.
இப்படி இருக்கும் நிலையில் இன்று கமல் தன்னுடைய ஸ்டையிலில் ஒரு குட்டி ப்ரோமோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் அக்டோபர் 1 முதல் என போடப்பட்டுளள்து..இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது..
Bigg Boss Tamil Season 7 Grand Launch - அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/di3UPo4T8c
— Vijay Television (@vijaytelevision) September 15, 2023