‘ஓப்பன்ஹெய்மர்' படத்தில் இப்படி ஒரு சம்பவமா.?
 

 
1

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.பலருக்கு புரியவில்லை என சொல்லியும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..அதனை போல் வசனங்கள் சரி இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் வந்தது.

படத்தின் பெரும்பகுதி உரையாடல் தான் என்பது கசப்பாக இருந்தது நோலன் படம் என்றாலே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது ஆனால், இப்படத்தில் முழுவதுமே ஒரு உரையாடலாக தான் செல்கிறது.கண்டிப்பாக ஆக்‌ஷன் அதிரடி விறுவிறுப்பான நோலன் படம் தான் வேண்டும் என்பவர்களுக்கு கூட இந்த படம் பிடிக்குமா என்றால் Doubt தான்.

இப்படம் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.ஓப்பன்ஹெய்மர் படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன் என்ற பகவத் கீதை வசனம் இடம் பெற்று இருந்தது.

இதனால் இந்திய ரசிகர்கள் சிலர், ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள் வைத்ததற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்…மேலும் இது போன்ற காட்சிகளை ஏன் கட் செய்யவில்லை என்று இந்திய சென்சார் வாரியத்துக்கு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்…பலர் தங்களது கோபத்தையும் கமெண்ட்ஸ் வழியாக காட்டி வருகின்றனர்..

From Around the web