மணிகண்டன் வாழ்வில் இப்படி ஒரு வலியா? சோதனையில் ஆரம்பித்து சாதனையில் முடிந்த கதை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை தொடர்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு கவனம் பெற்றவர் மணிகண்டன். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்பது அவரது முதல் கனவு. ஆனால் எடுத்ததும் அவருக்கு அந்தக் கதவு திறக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஸ்க்ரீன் ரைட்டராகவும், வசனகர்த்தாவாகவும் தனது பயணத்தை கோலிவுட்டில் தொடங்கினார் மணிகண்டன். அது அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
அதன்படி விக்ரம் வேதா படத்தில் அவர் வசனங்களை எழுதினார். மிக அற்புதமாக அவர் வசனங்களை எழுதியிருந்தார். அதே படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கவும் செய்திருந்தார். விக்ரம் வேதா வசனங்கள் எல்லாமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதேபோல் விஸ்வாசம் படத்துக்கும் மணிகண்டன்தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நரை எழுதும் சுயசரிதம் படத்தையும் இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் வரவேற்பை பெற்றது. முக்கியமாக டீ கடை சீன், நேர்காணலுக்கு செல்லும் சீன் என ஒவ்வொரு சீனையும் அவ்வளவு பக்குவமாக செய்துக்கியிருந்தார் மணிகண்டன்.
வசனகர்த்தா, இயக்குநர் என திறமைகளை கொண்டிருக்கும் மணிக்கு இன்னொரு திறமையும் இருக்கிறது. அதுதான் மிமிக்ரி. சிவகார்த்திகேயன் எப்படி மிமிக்ரி செய்து அப்ளாஸ் அள்ளுவாரோ அதேபோல் மணிகண்டனும் அப்ளாஸை அள்ளக்கூடியவர்.
வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் என பன்முகங்களை கொண்ட மணிகண்டன் இப்போது வளர்ந்துவரும் நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அடிப்படையில் கதை பற்றிய அறிவு இருப்பதால் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் பக்காவாக இருக்கின்றன. அப்படி அவர் கடைசியாக நடித்த குடும்பஸ்தன், லவ்வர், குட் நைட் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இதனால் கண்டிப்பாக அவர் பெரிய ரவுண்டு வருவார் என்று திரைத்துறையில் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மணிகண்டன் பட்ட கஷ்டம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரு டப்பிங் ஸ்டூடியோவில் மணிகண்டனிடம் 50 ரூபாயை கொடுத்து இனி இந்தப் பக்கமே வந்துவிடக்கூடாது என்று அசிங்கப்படுத்தி அனுப்பினார்களாம். மணிகண்டனும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அன்றே உறுதி பூண்டிருக்கிறார். அவர் ஏற்ற உறுதி போல் இன்று வெற்றிகரமான ஹீரோவாக மாறியிருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. வளர்ச்சினா இது வளர்ச்சி என்று ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்.