நடிகை அமலாபால் மகனா இது..! அடடா எவ்வளோ கியூட்டா இருக்காரு!
Oct 17, 2024, 09:05 IST
தமிழில் வீர சேகரன் என்கிற படத்தில் நடித்தார் நடிகை அமலாபால். இந்த படத்திற்கு பிறகு அமலாபாலுக்கு சிறந்த நடிகை என பெயர் வாங்கி கொடுத்தது மைனா படம் தான்.
அப்பட வெற்றி அவருக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பின் சில படங்கள் நடித்து வந்தவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது, இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது மகனுடன் இணைந்து எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.