நடிகை நக்மாவா இது..? சூர்யா மகள் பள்ளியில் நக்மாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி..!

தியா சூர்யா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். அதன் கிராஜுவேஷன் நிகழ்ச்சியில் சூர்யாவின் பெற்றோர், ஜோதிகாவின் பெற்றோர், அக்கா நக்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தியாவை வாழ்த்தினார்கள்.
அப்பா சூர்யா, அம்மா ஜோதிகாவுடன் தியா இருக்கும் புகைப்படமும், தாத்தா சிவகுமார், பாட்டி லட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது. ஊரையே படிக்க வைக்கும் புண்ணியவானின் மகள் பள்ளிப் படிப்பை முடிதித்திருக்கிறார். வாழ்த்துக்கள் தியா என பலரும் வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் தன் தங்கை மகள் பள்ளியில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் நடிகை நக்மா. மேலும் தான் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். பேண்ட், சட்டையில் மிகவும் அழகாக இருக்கிறாார் நக்மா.நக்மா தற்போது வெயிட் போட்டிருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
என்ன மேடம் ரொம்ப வெயிட் போட்டுவிட்டீர்கள்?. உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா?. ஆனால் வெயிட் போட்டாலும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்களும் ஒரு திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா?. தங்கைகளின் பிள்ளைகளுடன் புகைப்படம் எடுப்பதை விட உங்கள் பிள்ளைகளுடன் எடுத்தால் நன்றாக இருக்குமே என தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலரோ, உங்கள் தங்கை ஜோதிகா தன் எடையை ரொம்ப குறைத்து ஒல்லியாகிவிட்டார். அவரிடம் டிப்ஸ் கேட்டு கொஞ்சம் வெயிட்டை குறைங்க மேடம். ரொம்ப வெயிட்டாக இருப்பது நல்லதுக்கு இல்லை என அறிவுரை வழங்கியுள்ளனர்.
1990ம் ஆண்டு நடிகையான நக்மா கோலிவுட் வந்தபோது முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி, மராத்தி படங்களில் நடித்தார். போஜ்புரி படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையானார்.
ஆனால் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து படங்களில் நடிக்காமல் இருக்கிறார். நக்மா நல்ல அழகு மட்டும் அல்ல திறமையான நடிகையும் கூட.