இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் தங்கை இந்த நடிகையா..?
 

 
கோவிந்த் வசந்தா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் தங்கை என்கிற விபரம் தெரியவந்துள்ளது.

மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படம் வாயிலாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக மாறினார் கோவிந்த் வசந்தா. ஸ்ரீ நாராயணா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மெடிக்கல் சையின்ஸ் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி.

படிப்பு முடிந்தவுடன் சினிமாவில் கால்பதித்த அவர், குறிப்பிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தன. தற்போது அவர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் உறவினர்கள் என்கிற விபரம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் கோவிந்த் வசந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி, அவரை அண்ணன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

From Around the web