தளபதி விஜய்க்கு மகளாக நடிக்கிறாரா இந்த பிக்பாஸ் பிரபலம்..?

 
1

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ‘. இதில் அவருக்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிஷா இணைகிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய்-திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் நிலையில் அவர்களின் 15 வயது மகளாக பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி நடிக்கிறார்.

இது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. காஷ்மீரை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில், நடைபெற உள்ள நிலையில், அப்போது விஜய்-திரிஷாவுடன் இணைந்து ஜனனி நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web