தளபதி 66 படத்தின் வில்லன் இந்த பிரபல நடிகரா..?

 
தில்ராஜூ, வம்சி படிப்பள்ளியுடன் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும்  புதிய படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் அடுத்ததாக தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டாலிவுட் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.

இதன்காரணமாக தளபதி 66 படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கிலும் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான சந்தையை சரிகட்டும் பொருட்டாக தளபதி 66 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

மேலும் அந்த படத்தில் நடிப்பதற்கு நானியும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web