வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் இந்த பிரபல நடிகையா..?

 
போலோ சங்கர்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘வேதாளம்’. தமிழில் மிகப்பெரிய வெற்றி அடைந்த இப்படம் தெலுங்கில் ‘போலோ சங்கர்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு தங்கையாக நடிக்கிறார். தற்போது படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர் ‘சைரா நரசிம்ஹ ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வரும் நவம்பர் 11-ம் தேதி இப்படம் பூஜையுடன் துவங்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2022 கோடை விடுமுறை நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வர ‘போலோ சங்கர்’ படக்குழு திட்டமிட்டுள்ளது.

From Around the web