ஜவான் படத்தில் நடிப்பதற்காக பிரியாமணி வாங்கிய சம்பளம் இவ்வளவா?

 
1

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அதனை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் வைத்து பாலிவுட் சினிமாவின் ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்காக அட்லி கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய், நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் பிரியாமணி இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.

படங்களில் நடிக்க பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த பிரியாமணிக்கு இந்த வாய்ப்பு பெரிய ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது.

From Around the web