இது பொன்னியின் செல்வன் படமா..? பிளே ஸ்டேஷன் போஸ்டரா..?

 
பொன்னியின் செல்வன்

புதியதாக வெளியாகியுள்ள மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது 75 சதவீதம் வரை முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டங்களுக்கான படப்பிடிப்பு பாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

மீண்டும் இதனுடைய ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் விரைவில் துவங்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக புதிய போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வனை சுருக்கி பி.எஸ் என்று குறிப்பிட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் இது பொன்னியின் செல்வன் படமா..? அல்லது பி.எஸ் பிளே ஸ்டேஷன் விளையாட்டா..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரூ. 800 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் மத்திய பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

From Around the web