இதென்னா பிரபாஸ், இப்படியொரு கெட்-அப்..? ரசிகர்கள் ஷாக்..!

 
ஆதிபுருஷ் படக்குழுவுடன் பிரபாஸ்

சமீபத்தில் நடிகர் பிரபாஸ் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளதை அடுத்து, அவருடைய தோற்றம் ரசிகர்களை ஷாக் அடையச் செய்துள்ளது.

இந்திய சினிமாவில் பாகுபலி திரைப்படம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸ் தேசியளவில் முக்கியமான ஹீரோவாக மாறியுள்ளார்.

அவர் நடிப்பில் உருவாகி வரும் பெரும்பாலான படங்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. 

அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் 2022 பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் ‘அதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடித்து வரும் பிரபாஸின் கெட்-அப் வெளியாகியுள்ளது. முறுக்கு மீசையுடன் தலையில் முடியில்லாமல் இருப்பது போல பிரபாஸ் காணப்படுகிறது. இதனால் அவருக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
 

From Around the web