தொடையழகி ரம்பா மகளா இது..? என்னமா வளர்ந்துவிட்டார் பாருங்க..!  

 
1
நடிகை ரம்பா நடித்த படங்களில் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், விஐபி, காதலா காதலா, ஆனந்தம், மின்சார கண்ணா உட்பட பல படங்கள் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக காணப்படுகின்றது. மேலும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்தார். தற்போது  தனது குடும்பத்துடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். தனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சினிமா துறையில் இருந்து முற்றாக விலகி விட்டார். ஆனாலும் அவ்வப்போது நடைப்பெறும் நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரம்பாவின் குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு சென்று உள்ளதாக தெரிய வருகின்றது. அவர் தனது இன்ஸ்டா  பக்கத்தில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவின் மகள் எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். மேலும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பார்த்து லைக் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web