இந்த மாதிரி நேரத்தில் செய்யுற வேலையா இது? அமலா பாலுக்கு அட்வைஸ் கொடுக்கும் நெட்டிசன்கள்..! 

 
1

அமலாபால் நடித்த மைனா திரைப்படம் அவரது கேரியரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதை அடுத்து முன்னணி நடிகரான தளபதி விஜய் உடன் தலைவா படத்தில் நடித்திருந்தார். மேலும் வேலையில்லா பட்டதாரி, போன்ற பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.தலைவா படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முடிவுக்கு வந்தது.இதைத்தொடர்ந்து சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த அமலாபால், தனது நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாகவும் காணப்படுகிறார்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பமாக காணப்படும் அமலாபால் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட வீடியோக்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அண்மையில் இவருக்கு வளைகாப்பும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என கண்டிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

From Around the web