இது பிக் பாஸ் வீடுதானா? கேமரா முன் லிப் கிஸ் அடித்த ஜோடி..!

 
1

பிக் பாஸில் கடந்த சீசன்களில் ஒரே வீடாக இருந்த நிலையில் இந்த சீசனில் பிக் ஹவுஸ் மற்றும் சுமால் ஹவுஸ் என இரண்டு வீடுகள் உள்ளன.இதில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் படிப்பு குறித்து முட்டிக்கொண்டது. இந்த பஞ்சாயத்தை கமல் தீர்த்து வைத்தார்.

இதில் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறினார். இதையடுத்து பவா செல்லதுரை, இந்த சூழ்நிலையில் இருக்க முடியாது என்று கூறி தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.

18 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் வீட்டில் 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போது வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பட உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளனர். இதனால், ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கு பஞ்சமே இருக்காது, ஆளு ஆளுக்கு ஜோடியாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல் கதை உருவாகி உள்ளது. ஐஷு மற்றும் நிக்சன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறி நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்தம் கொடுத்துக் கொண்டனர். நடுவில் ஒரு கண்ணாடி இருந்ததால், லிப் லாக் சீன் மிஸ்ஸிங் என்று நெட்டிசன்ஸ் இணையத்தில் இந்த வீடியோவை தீயாக பரவவிட்டு புலம்பி வருகின்றனர்.


 

From Around the web