பிரபல நகைச்சுவை நடிகருக்கு இந்த நிலையா ? உதவி கேட்கும் காமெடி நடிகர்..!
Jun 26, 2024, 08:05 IST

ஆரம்ப காலங்களில் பைட்டர் டூப் ஆட்டிஸ்டாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வெங்கல்ராவ்.அன்றைய காலத்தில் ரஜனிக்கும் டூப் போட்ட வெங்கல்ராவ் எதிர்பார விதமாக நகைச்சுவை காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார்.பெரிதும் வடிவேலுவுடன் நகைச்சுச்சுவை காட்சிகளில் தோன்றிய வெங்கல்ராவ் கடைசியாக வடிவேலுவின் எலி படத்தில் வடிவேலுவின் கையாளாக நடித்திருப்பார்.
திரையில் வந்து நம் அனைவரையும் சிரிக்க வைக்க இவர் தற்போது வெளியிட்டிருக்கும் காணொளி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.ஒரு கை கால் செயலிழந்து உடல் நலகுறைவுவுடன் இருக்கும் நடிகர் வெங்கல்ராவ் சினிமா துறையினரிடம் தனது சிகிச்சைக்கான பணவுதவியை கோரி வீடியோவை வெளியிட்டுள்ளார்.